ஆசிரியர்களிடம் சொல்லக்கூடாது என மிரட்டி பாலியல் தொல்லை!

ஆசிரியர்களிடம் சொல்லக்கூடாது என மிரட்டி பாலியல் தொல்லை!
ஆசிரியர்களிடம் சொல்லக்கூடாது என மிரட்டி பாலியல் தொல்லை!

கன்னியாகுமரியில் உள்ள மாணவர்கள் விடுதியில் புகாரின் அடிப்படையில் இரு சமையல்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வந்த விஸ்வாம்பரன், வில்சன் ஆகியோர் அரவிந்த் என்ற ஏழாம் வகுப்பு ஆதரவற்ற மாணவனை தாக்கியுள்ளனர். இது சம்பந்தமாக பள்ளி ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் விடுதி சமையல் கழைஞர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யபட்டனர். இந்நிலையில் அந்த மாணவனின் காப்பாளர் விடுதிக்கு வந்து மாணவனிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்ட கேட்டபோது, சமையல் கலைஞர்கள் இருவர் அந்த மாணவர் உட்பட பல மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதற்கு ஒத்துழைக்காத காரணத்தால் தலையில் கம்பியால் தாக்கியதாகவும், ஆசியர்களிடம் கூறக்கூடாது என மிரட்டியதாகவும் அந்த மாணவர் கூறியுள்ளார். 

இதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அந்த விடுதியில் குவிந்த வண்ணம் இருந்தனர். அத்துடன் சம்பவம் குறித்து மேல் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இந்நிலையில் அந்த விடுதியில் ஆதிதிராவிட துறை துணை ஆட்சியர் சிவதாஸ், குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரி குமுதா உட்பட அதிகாரிகள் ஆய்வு நடத்தியதோடு, மாணவர்களிடம் நேரடியாக விசாரணையும் நடத்தினர். விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவதாஸ், தவறு செய்த ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அத்துடன் விடுதியில் நிரந்தர காப்பாளர் நியாமிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com