Published : 07,Feb 2018 01:50 AM
முதல்வர் பழனிசாமி நன்கு குணமாகிவிட்டார்: மருத்துவர் தகவல்

கண்புரை நீக்கம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதலமைச்சர் பழனிசாமி நன்கு குணமடைந்துவிட்டதாக மருத்துவர் மோகன்ராஜன் கூறியதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள ராஜன் கண் மருத்துவமனையில் கடந்த 4-ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி கண்புரை நீக்கம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது சென்னை அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் மகேஸ்வரி உடனிருந்தார். அன்றைய தினமே வீடு திரும்பிய முதலமைச்சர் பழனிசாமி ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முதலமைச்சர் பழனிசாமியை பரிசோதித்த மருத்துவர் மோகன்ராஜன், அவர் நன்றாக குணமடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார் என அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.