Published : 06,Feb 2018 08:17 AM
காஷ்மீர் மருத்துவமனையில் தாக்குதல்: பாக். தீவிரவாதி எஸ்கேப்!

காஷ்மீரில் தீவீரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பாகிஸ்தான் தீவிரவாதி அங்கிருந்து தப்பினார்.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஸ்ரீமகாராஜா ஹரி சிங் மருத்துவமனை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட நவீத் ஜாட் உட்பட 5 கைதிகள் சிகிச்சைக்கு இங்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுடன் சில ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்களும் இருந்தனர். தீவிரவாதி நவீத், போலீஸ்காரர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து கண்மூடித்தனமான சுட்டான். இதில் ஒரு போலீஸ்காரர் அந்த இடத்திலேயே பலியானார். மற்ற போலீஸ்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதைப் பயன்படுத்திக்கொண்ட நவீத், அங்கிருந்து தப்பியோடிவிட்டான். இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.