Published : 06,Feb 2018 07:35 AM

திருக்குறள் ஒப்புவித்த டென்மார்க் மாணவர்கள்: அசந்துபோன அமைச்சர்!

Denmark-Students-Sang-Tamil-Thirukkural-in-Front-of-Minister-Mafai-Pandiarajan

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை சந்தித்த டென்மார்க் மாணவர்கள் அவரிடம் திருக்குறளை ஒப்புவித்தனர்.

டென்மார்க்கில் இருந்து தமிழக பள்ளிகள் மற்றும் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள வந்த மாணவர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அவர்களுக்கு புத்தகங்களை பரிசளித்த அமைச்சரின் முன்னிலையில், திருக்குறளை ஒப்புவித்தனர். வணக்கம் எனக்கூறி திருக்குறள் பாடலை ஒப்புவிக்க ஆரம்பித்த அவர்கள், “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற குறளை முதலில் கூறினர்.

பின்னர், “எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு” என்ற குறளையும் ஒப்புவித்தனர். மேலும் இந்த குறளுக்கு அவர்கள் விளக்கத்தையும் கூறி, நன்றியுடன் நிறைவு செய்தனர். இந்தக் காட்சி காண்பவரை மெய்சிலிர்க்க வைத்தது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்