ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் 16-ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நெடுவாசல் போராட்டக் குழுவைச் சேர்ந்த 11 பேர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அப்போது, ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட நடவடிக்கை எடுக்குமாறு போராட்டக்குழுவினர் வலியுறுத்தினர்.
இதன்பின் அறிக்கை வெளியிட்டிருந்த முதலமைச்சர் , ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாயிகளை பாதிக்கும் என்பதால் அத்திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என தெரிவித்திருந்தார். எனவே நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் அச்சப்படத் தேவையில்லை எனவும், அரசின் உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்
முதலமைச்சர் பழனிசாமி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்ட போதிலும், நெடுவாசலில் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் நெடுவாசல் உள்ளிட்ட பிற பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide