[X] Close

ஹவ்ரா பாலத்துக்கு 75 வயது

Kolkata---s-Howrah-Bridge-completes-75-years-as-a-city-landmark

கொல்கத்தா நகரின் அடையாளமான ஹவ்ரா பாலம் 75 வயதை எட்டியுள்ளது.


Advertisement

சென்னை நகருக்கு சென்ட்ரல் ரயில் நிலையம், மும்பைக்கு, கேட் வே ஆஃப் இந்தியா போல கொல்கத்தா நகரி்ன் அடையாளச் சின்னம் ஹவ்ரா பாலம். புகழ்பெற்ற இந்தப் பாலத்தை பல்வேறு சினிமா படங்களிலும் பார்த்திருக்க முடியும். இந்நிலையில் இந்தப் பாலம் 75 -வது வயதை எட்டியுள்ளது.

இதையொட்டி ஹவ்ரா பாலம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. இப்பாலத்தின் பெருமைகளை நினைவு கூறும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஹவ்ரா மற்றும் கொல்கத்தா நகரங்களை இணைக்கும் இந்தப் பாலம் இந்தியாவின் பொறியியல் அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 705 மீட்டர் நீளமுள்ள இப்பாலத்தை தினமும் லட்சக்கணக்கானோர் கடந்து செல்கின்றனர்
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close