Published : 03,Mar 2017 04:16 PM
ஓபிஎஸ் அணியினர் காணாமல் போய்விடுவார்கள்.. டிடிவி தினகரன்

வருங்காலத்தில் ஓபிஎஸ் அணியினர் அரசியலில் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக எம்பிக்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், எம்ஜிஆர் மறைவின் போது அதிமுகவை அழிப்பதற்காக பிஹெச்.பாண்டியன் எத்தகைய பணிகளை மேற்கொண்டாரோ, அதே முயற்சியில் ஓபிஎஸ்-சும் அவருடன் சேர்ந்து தற்போது ஈடுபட்டு வருவதாக விமர்சித்தார். ஓ.பி.எஸ். பன்னீர்செல்வம், பிஹெச். பாண்டியனுடன் சேர்ந்து கொண்டு அதிமுகவை அழிப்பதற்கு சதி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் வருங்காலத்தில் ஓபிஎஸ் அணியினர் அரசியலில் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் எனவும் டிடிவி தினகரன் கூறினார்.