புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே லாரியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற காரும், தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த டிப்பர் லாரியும் வண்ணாரபட்டி விளக்கு என்ற இடத்தில் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் கார் மீது லாரி ஏறியதில், அதில் பயணம் செய்த மூன்று பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் காருக்குள் நசுங்கி கிடந்த மூன்று பேரின் உடல்களையும் போராடி மீட்டனர்.
இறந்தவர்கள் புதுக்கோட்டை கம்பன் நகரைச் சேர்ந்த கனகராஜ், உதயகுமார், திருவப்பூரைச் சேர்ந்த சுந்தரராஜன் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. சம்பவ இடத்தில் ஆய்வு செய்த புதுக்கோட்டை எஸ்.பி. செல்வராஜ், விபத்திற்கான காரணம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகிறார். இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஆதனக்கோட்டை போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுநர் மணிகண்டனை தேடி வருகின்றனர்.
Loading More post
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!