Published : 04,Feb 2018 12:05 PM

தினமும் ஒருவரை கொல்லும் யானை: ஊசி போட்டு பிடிக்க திட்டம்..!

Elephant-killed-farmers

கிருஷ்ணகிரி மாவட்ட‌ம் சின்னார் ‌பகுதியில் ஒற்றை யானை தாக்கி மேலும் ஒரு விவசாயி இன்று உயிரிழந்தார். இதனையடுத்து யானையை விரட்டும் வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட‌ம் சின்னார் ‌பகுதியில் நேற்று ராஜப்பா என்ற விவசாயியை யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அந்த யானை சாமல்பள்ளம் பகுதிக்கு விரட்டப்பட்டது. இந்நிலையில் அந்த யானை இன்று மீண்டும் சின்னார் பகுதிக்கு திரும்பியது.

தேவர்குட்டப்பள்ளி கிராமத்தை செர்ந்த முனிராஜ் என்ற விவசாயி அதிகாலை நேரத்தில் சின்னார் நோக்கி சென்ற போது அங்கிருந்த யானை அவரை தாக்கியிருக்கிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ‌கடந்த 2 நாட்களில் இருவர் உயிரிழந்திருப்பதால் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்தால் தான் உடலை வ‌ங்குவோம் எனக் கூறி உறவி‌‌னர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட‌னர். நிகழ்விடத்திற்கு வந்த‌ காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். இதனையடுத்து யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் பணி தற்பொது தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என வனத்துறை சார்பில் தண்டோரா அடித்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்