Published : 03,Feb 2018 04:27 PM

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தால் அரசுகளுக்கு ஆபத்தா..? மதுரை ஆதீனம்

Madurai-Aadheenam-express-his-views-about-Meenakshi-Amman-Temple-fire-accident

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தால் தமிழக அரசுக்கோ, மத்திய அரசுக்கோ எந்த ஆபத்தும் நேராது என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுர வளாகத்தில் உள்ள 35க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. அதையடுத்து 5 தீயணைப்பு வண்டிகள் மூலம் மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், தீ பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் மேற்கூரையிலிருந்து கற்கள் பெயர்ந்து விழுவதால், அதன் உறுதித் தன்மையை ஆய்வு செய்வதற்காக வருவாய் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம், விபத்தா அல்லது சதியா என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளார் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தால் தமிழக அரசுக்கோ, மத்திய அரசுக்கோ எந்த ஆபத்தும் நேராது என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவித்த மதுரை ஆதீனம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து இயற்கையானது என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், கோயில் வளாகத்திலுள்ள கடைகளின் மின் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது என்றும் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்