தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள், இணையதளம் (www.sr.indianrailways.gov.in) செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகளுக்காக தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே கீழ் இயங்கும் www.sr.indianrailways.gov.in என்ற இணையதளம் பிற்பகல் 2.05-3.45 மணி வரை, இரவு 11.30-1.45 வரை செயல்படாது. அனைத்து ரயில் நிலையங்களிலும் மதியம் 2.05 முதல் 3.45 மணி வரையும், இரவு 11.30 முதல் 1.45 மணி வரை டிக்கெட் கவுன்ட்டர்களும் செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்த பணிகளுக்காக டிக்கெட் கவுன்ட்டர்கள், இணையதளம் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாகவும், வருடம் ஒருமுறை இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்துவது, கூடுதல் முயற்சிகளை மேற்கொள்வது, செயல்பட்டு வரும் சேவையை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்
. ஆகவே பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் பதிவு, மற்றும் பயணம் குறித்த பணிகளை முடிக்குமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்