அரை கி.மீ. ’சாலை’யை திருடிய வில்லங்க திருடன்!

அரை கி.மீ. ’சாலை’யை திருடிய வில்லங்க திருடன்!
அரை கி.மீ. ’சாலை’யை திருடிய வில்லங்க திருடன்!

கான்கிரீட் சாலையை திருடி விற்ற வில்லங்க சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ளது சங்கேஷூ கிராமம். கடந்த மாதம் 24-ம் தேதி காலை இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கம் போல தங்கள் வேலைகளை கவனித்துள்ளனர். அப்போது திடீரென்று ஒருவர் ஓடி வந்து, ‘எலேய், நம்ம ரோட்டை காணோம்’ என்று வடிவேலுவின் ’கெணத்தைக் காணோம்’ ஸ்டைலில் கூறியுள்ளார். இதையடுத்து எல்லோரும் வந்து பார்த்துள்ளனர். அப்போது கான்கிரீட் சாலை சுமார் அரை கி.மீ தூரத்துக்கு மாயமாகி இருப்பது தெரிந்தது. ஒருவேளை அறிவிக்காமலேயே, சாலை பராமரிப்பு வேலை ஏதும் நடக்கிறதோ என நினைத்தனர். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என தெரியவந்தது. 

பின்னர் போலீசில் புகார் தெரிவித்தனர். அவர்களின் விசாரணையில் ஷூ என்பவர் சாலையை திருடியிருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து விசாரித்தனர்.

‘நான் தான் அதை பண்ணினேன். கல் தொழிற்சாலை ஒன்று சிமென்ட் காங்கிரீட்களை வாங்குவதாகச் சொன்னது. நல்ல பிசினஸாக இருக்கிறதே என்று துளையிடும் மிஷனை வாடகைக்கு வாங்கி, சாலையை சதுர சதுரமா வெட்டி, லாரியில் ஏற்றி அனுப்பினேன். ஒரு இரவில் அரை கி.மீ சாலையைதான் வெட்டி எடுக்க முடிந்தது’ என்று வருத்தத்தோடு கூறியிருக்கிறார். 

இதுவரை 500 டன் கான்கிரீட் சிலாப்களை விற்று சம்பாதித்திருக்கிறாராம் ஷூ. இவரின் இந்த வித்தியாச திருட்டு, சீன சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி இருக்கிறது. அதில் ஒரு கமென்ட்: ’வறுமை அவனை எப்படி புதுமையா திருட யோசிச்சிருக்கு பார்த்தீங்களா?’ என்பது. 

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com