[X] Close

மோசமான சாலையால் சிரமமாகும் சிகரம் பயணம்

Difficult-to-travel-by-a-bad-road

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா சிகரத்திற்குச் செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதாக சுற்றுலாப் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். 


Advertisement

தொட்டபெட்டா சிகரத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மலை உச்சிக்கு செல்லும் மூன்று கிலோமீட்டர் சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. சாலை சீரமைப்பதற்காக, அங்கு செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டும், சாலை சீரமைக்கப்படாமல் இருப்பது சுற்றுலாப் பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தொட்டபெட்டாவுக்குச் செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close