[X] Close

விமானப்படை வீரர் மனைவிக்கு பாலியல் தொல்லை: சிபிசிஐடி போலீஸ் கைது!

Police-SI-Arrested-For-harassment-case-in-Running-Train

கோவை அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிபிசிஐடி எஸ்.ஐ கைது செய்யப்பட்டார்.


Advertisement

சென்னையில் இருந்து கோவை வரை சென்ற விரைவு ரயிலில், கோவை சூலூர் பகுதி விமானப்படை பிரிவில் பணிபுரிந்து வரும் அசோக்குமார், தனது மனைவியுடன் சென்றுள்ளார். அதேவகுப்பில் நீலகிரி மாவட்டம் கூகலூர் பகுதியில் சிபிசிஐடி பிரிவு உதவி ஆய்வாளராக பணி செய்து வரும்ச ந்திரசேகரன் என்பவரும் பயணத்துள்ளார். 

இந்நிலையில் சேலம் ரயில் நிலையம் வரும் போது சந்திரசேகரன் அசோகுமார் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அசோக்குமார் ஈரோடு ரயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரயில்வே போலீசார் விசாரனை நடத்தியதில் சந்திரசேகரன் மது போதையில் இருந்ததும், பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்துள்ளது. பின்னர் அவரை கைது செய்த ரயில்வே போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close