Published : 02,Feb 2018 11:41 AM
வாட்ஸ்அப்பில் புதிய வசதி: இனி மெசேஜ்ஜை படிக்க வேண்டாம்;கேட்கலாம்

ஒரு நாளைக்கு சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் தற்போது புதிய அப்டேட்டுடன் வெளிவரவுள்ளது.
பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தினந்தோறும் புதுப்புது அப்டேட்களை வழங்கிவருகிறது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பில் கார்களில் பயன்படுத்தப்படும் Apple CarPlay இல் வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்தக்கூடியதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது Apple Car Play இல் வாட்ஸ் ஆப் செயலியை நிறுவி காரை ஓட்டும் நேரத்திலேயே குறுஞ்செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியும். இதன்போது கார் ஓட்டுவதில் ஏற்படும் சிரமத்தினை தவிர்ப்பதற்கு ஓரிரு எழுத்துக்களை தட்டச்சு செய்ததும் சில சொற்களை காண்பிக்கும் Dictation முறையில் குறுஞ்செய்திகளை தட்டச்சு செய்யும் முறை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் ஆப்பிளின் Siri குரல்வழி கட்டளை மூலம் வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட குறுஞ்செய்திகளை ஒலி வடிவில் கேட்கவும் முடியும்.