Published : 03,Mar 2017 10:50 AM

நடிகர் அஜித்திற்கு கன்னட திரையுலகினர் கண்டனம்

Yennnai-Arindhal-Kannada-dubbing-opposed

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’திரைப்படம் கன்னடத்தில் இன்று வெளியானது. இதற்கு கன்னட திரையுலகத்தில் உள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழில் பெரும் வெற்றியை பெற்ற ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் கன்னடத்தில் ‘சத்யதேவ் ஐ.பி.எஸ்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.

இந்நிலையில் வேற்று மொழி படங்கள் கன்னடத்தில் டப்பிங் செய்யப்படுவதால், கன்னட படங்களின் வசூல் பாதிக்கிறது என கன்னட திரையுலகினர் மத்தியில் இப்படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இதனால் தயாரிப்பாளர்கள் கன்னட படங்களில் முதலீடு செய்ய தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவை சந்தித்து, கன்னட திரையுலகத்தினர் கோரிக்கை மனுவையும் அளித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்