[X] Close

முதலில் நான் விஜய் ரசிகை: இளம் நடிகை ஓபன் டாக்

i-m-a-vijay-fan-says-athulya

முதலில் நான் விஜய்யின் தீவிர ரசிகை என்று கூறியிருக்கிறார் ஒரு இளம் நடிகை. 

‘காதல் கண்கட்டுதே’மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் அதுல்யா. இப்போது ‘நாடோடிகள்2’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்போது இவரது நடிப்பில் ‘ஏமாளி’ வெளியாகி உள்ளது. இதில் புதுமுகம் சாம் ஜோன்ஸ் மற்றும் சமுத்திரகனி என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லரில் கடும் கவர்ச்சியில் அதுல்யா நடித்திருந்ததால் சில சர்ச்சைகள் எழுந்தன. 
இந்நிலையில் ‘ஏமாளி’க்கான ஊடக சந்திப்பில் அதுல்யா கலந்து கொண்டார். அப்போது அவர், “ நான் தீவிரமான விஜய் ரசிகை. மேலும் முதலில் நான் நடிகர் விஜய்யின் ரசிகை, அப்புறம்தான் நான் ஒரு நடிகை” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேச்சால் அவர் அடுத்த கட்ட ‘டார்கெட்’ விஜய் உடன் ஜோடி போடுவதுதான். சரியாகதான் ப்ளான் போடுறீங்க என திரை விமர்சகர்கள் சிலர் சமூக வலைதளத்தில் கருத்திட்டு வருகின்றனர்.


Advertisement


 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close