
நிதியமைச்சர் அருண்ஜெட்லி பட்ஜெட்டை இந்தி மொழியில் தாக்கல் செய்ததற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுவாக மத்திய பட்ஜெட்களை இதற்கு முந்தைய நிதி அமைச்சர்கள் ஆங்கில மொழியில் தாக்கல் செய்வதுதான் வழக்கம். அதற்கு மாறான அருண் ஜெட்லி ஆங்கில மொழியில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி இந்தி - ஆங்கிலம் கலந்து இருமொழிகளில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்தியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆங்கிலத்தில் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த மத்திய பட்ஜெட்டை இந்தியில் தாக்கல் செய்தது கடும் கண்டனத்திற்குரியது என்று வைகோ கூறியுள்ளார். மேலும், 8 ஆவது அட்டவணையிலுள்ள அனைத்து மொழிகளிலும் பட்ஜெட் தாக்கல் செய்தால் வரவேற்கத்தக்கது என்றும் அவர் வலியுறுத்தினார்.