[X] Close

மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கானது: முதலமைச்சர் பழனிசாமி

TamilNadu-CM-About-Union-Budget-2018

2018-19ம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கான நடுநிலையான பட்ஜெட்  என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

2018-19ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ வேளாண்மை, ஊரக வளர்ச்சி குறித்த திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. கிராமப்புற மற்றும் சுகாதார வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட உணவுப் பூங்கா திட்டத்தினால் தமிழகம் பலனடையும்.சென்னை புறநகர் ரயில் பாதைகளை விரிவுப்படுத்தும் அறிவிப்பு வெளியாகவில்லை. 2018-19ம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கான நடுநிலையான பட்ஜெட்” என தெரிவித்துள்ளார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close