[X] Close

6 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்த சிறுவன் ?

6-year-old-child-sexual-Harassment-and-murder-in-Tuticorin-

கீழத்தட்டப்பாறை கிராமத்தில் 6 வயது சிறுமியை 14 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கீழத்தட்டப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகள் சிவகாமி. வயது 6. அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்திருக்கிறார். நேற்று சின்னத்தம்பியும், அவரது மனைவியும் வழக்கம்போல கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். அங்கன்வாடிக்கு சென்று திரும்பிய சிறுமி சிவகாமி வீட்டில் தனியார் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மாரிக் கண்ணன் சிறுமி சிவகாமியின் வீட்டிற்கு சென்றிருக்கிறான். மாரிக் கண்ணன் 9ம் வகுப்பு மாணவர் ஆவார். முதலில் சிறுமி சிவகாமியுடன் மாரிக்கண்ணன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் அவர்கள் பக்கத்தில் 6 வயது சிறுவன் ஒருவரும் இருந்திருக்கிறார். சிறிது நேரத்தில் சிவகாமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துள்ளார் மாரிக் கண்ணன். இதனால் பயந்துபோன அந்த 6 வயது சிறுவன் வீட்டிலிருந்து வெளியே ஓடிவிட்டார்.


Advertisement

பின்னர் சிறுமி சிவகாமிக்கு மீண்டும் பாலியல் தொந்தரவு அளித்த மாரிக்கண்ணன், இறுதியில் சிறுமியின் காலை பிடித்து தலையை தரையில் தூக்கி அடித்துள்ளார். வீட்டிலிருந்த மண்ணென்ணையை சிறுமி மீது ஊற்றிய சிறுவன், சிவகாமியை எரித்துக் கொன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாலையில் வீடு திரும்பிய பெற்றோர் சிறுமியின் நிலைமை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டிலிருந்து ஓடிய 6 வயது சிறுவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாரிக்கண்ணனை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் முடிவில்தான் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close