Published : 31,Jan 2018 11:46 AM

‘இந்தியன்2’வில் நயன்தாரா?

Nayanthara-in-Kamal-Haasan-Shankar---s-Indian-2-

‘இந்தியன்2’வில் நயன்தாரா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. லஞ்சம், ஊழலுக்கு எதிராக பேசிய இந்தப் படத்தை ரசிகர்கள் மாபெரும் வெற்றியடைய செய்தார்கள். இப்படத்தில் இடம்பெற்ற கமலின் ‘இந்தியன் தாத்தா’ கெட் அப் தமிழ் சினிமாவின் தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. மேலும் மிக பிரமாண்ட பட வரிசையில் இன்று வரை இடம் பிடித்துள்ளது. இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட இருப்பதாக சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் ட்விட் போட்டார். ஆனால் அதற்கு எந்தவித பதிலையும் படக்குழு தெரிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில் இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 அன்று இயக்குநர் ஷங்கர் தைவான் நாட்டில் ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு ‘இந்தியன்2’வை உறுதி செய்தார். இப்படத்தின் கதையில் மிக தைரியமான ஒரு பெண் கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்தத் தைரிய பெண் பாத்திரத்திற்காக நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் இப்படத்திற்கு மிக இளமையான இசை கோர்வை தேவைப்படுவதால் அனிருத்தை இசையமைக்க வைக்கலாம் என்றும் படக்குழு முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளி வந்துள்ளது. ஆனால் இந்தத் தகவலை இயக்குநர் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்