[X] Close

திருப்பூரில் முதல்முறையாக பிப்ரவரி 18ல் ஜல்லிக்கட்டு

Jallikattu-on-February-18-in-Tirupur

திருப்பூரில் முதல்முறையாக பிப்ரவரி 18ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

தமிழர் திருநாளை நினைவுகூறும் வகையில் தமிழகத்தின் பல பகுதியிலும் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் முதல்முறையாக பிப்ரவரி 18ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்கான அரசாணையை மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு குழுவினரிடம் வழங்கினார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்காக தனி மருத்துவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பார்வையிடவும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close