[X] Close

வாகன ஓட்டிகளை துரத்திப் பிடிக்கக் கூடாதா?: காவல்துறை விளக்கம்

Police-explains-about-the-punishment-for-violations-of-Traffic-rules

போக்குவரத்து விதிகளை மீறி விட்டு, நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்திப் பிடிக்கக் கூடாது என்று உத்தரவிடப்படவில்லை என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறினாலும், வாகன சோதனையில் நிற்காமல் சென்றாலும் துரத்திப் பிடிக்க வேண்டாம் என காவல் ஆணையர் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறி விட்டு, நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்திப் பிடிக்கக் கூடாது என்று உத்தரவிடப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறையினர் எடுப்பார்கள் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. போலீசார் பொதுமக்களிடம் கனிவோடும், பரிவோடும் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close