[X] Close

நடிப்பதற்கு மோடியை யோசனை கேளுங்கள்: ஜிக்னேஷூக்கு பிரகாஷ் ராஜ் அறிவுரை

jignesh-mevani-met---actor-prakash-raj

நடிப்பதற்கு மோடியைதான் யோசனை கேட்க வேண்டும் என்று ஜிக்னேஷ் கேள்வி ஒன்றுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார். 


Advertisement

குஜராத் மாநில சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி. இவர் சமீப காலமாக பாஜக மோடி அரசை மிக கடுமையாக விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இவர் அண்மையில் நடிகர் பிரகாஷ் ராஜை சந்தித்தாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பிரகாஷ் ராஜை சந்தித்த போது அவரிடம் நடிப்பதற்கு ஒருசில யோசனைகளை சொல்லுங்க என கேட்டேன். அதற்கு அவர் எனக்கு தெரியாது நாட்டின் பிரதமரிடம்தான் நடிப்பதற்கு யோசனை கேட்க வேண்டும்” என தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே கெளரி லங்கேஷ் கொலை விவகாரத்தில் பிரதமர் மோடி என்னைவிட சிறந்த நடிகராகப் பார்க்கிறார் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்திருந்தார். மேலும் அதை போல 21-ம் நூற்றாண்டின் சிறந்த நடிகர் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நாஸ்ட்ராடமஸ் கணித்திருப்பதாக பிரதமர் மோடியை  ஜிக்னேஷ் மேவானி மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement


 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close