[X] Close

இதற்காகத்தான் கிறிஸ் கெய்லை தேர்வு செய்தாரா சேவாக்?

Virender-Sehwag-explains-Punjab---s-decision-to-buy-Chris-Gayle

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக இருந்த இவர்,பல அதிரடிகளை நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல்-லில் குறைந்த பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ள கெய்லின் இப்போதைய ஃபார்ம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. 


Advertisement

சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சார்பாக களமிறங்கிய கெய்ல், பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் இந்த ஐபிஎல் ஏலத்தில் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. முதல் நாளில் யாரும் கண்டுகொள்ளாததை அடுத்து, அடிப்படை விலையான  ரூ.2 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி.

இந்நிலையில் அவரை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது பற்றி பஞ்சாப் அணியின் இயக்குனரும் வழிகாட்டியுமான வீரேந்திர சேவாக் கூறும்போது, ‘கிறிஸ் கெய்ல் சாதாரண வீரர் அல்ல. ஓபனிங் பேட்ஸ்மேனான அவர், எதிரணிக்கு எப்போதும் அபாயகரமான வீரர்தான். அதனால்தான் அணியில் சேர்த்தோம்’ என்றார்.


Advertisement

கெய்ல் தவிர, ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், ஸ்டோய்னிஸ், தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் ஆகிய அதிரடி வீரர்கள் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ளனர். 


Advertisement

Advertisement
[X] Close