Published : 30,Jan 2018 06:06 AM

8 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடுமை

8-Month-infants-raped-in-Delhi

டெல்லியில் 8 மாத பெண் குழந்தையை 28 வயது இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

வடமேற்கு டெல்லியில் உள்ள ஷகுர்பஸ்தி பகுதியில் கூலித்தொழிலாளி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை ஒன்று இருந்திருக்கிறது. கணவன் கூலி வேலைக்கு சென்றுவிட, மனைவியும் அருகாகையில் பணிப்பெண் வேலைக்கு சென்றிருக்கிறார். இதனால் தனது கைக்குழந்தையை அருகாமையில் உள்ள வீட்டில் கவனித்துக்கொள்ளுமாறு ஒப்படைத்து சென்றிருக்கின்றனர் அந்தத் தம்பதியினர். அந்த வீட்டில் இருந்த 28 வயது இளைஞர், முதலில் குழந்தையை வைத்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு குழந்தையை  தூக்கிச் சென்ற அந்த இளைஞர் 8 மாத குழந்தை என்றும்கூட பாராமல் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

குழந்தையின் தாய் வேலையை முடித்துவிட்டு, அந்த வீட்டில் சென்று குழந்தையை பெற சென்றிருக்கிறார். அப்போது குழந்தை இரத்தம் வடிந்த நிலையில் ஆபத்தாக இருந்திருக்கிறது. உடனடியாக பதறிப்போன தாய் குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். முதலில் குழந்தையை தான் ஒன்றுமே செய்யவில்லை என மறுத்த அந்த இளைஞர் சிறிது நேரத்திலேயே வீட்டை விட்டு ஓடியிருக்கிறார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்