[X] Close

தோனியுடன் ஆட்டம்: காத்திருக்கிறார் ’சிஎஸ்கே’ தமிழ் சிங்!

will-win-over-CSK-hearts--Harbhajan-singh

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 10 வருடமாக நிலைகொண்டிருந்த ஸ்பின் புயல் ஹர்பஜன் சிங், இந்த முறை சென்னைக்கு இடம்பெயர்ந்து ’தமிழ் சிங்’ ஆகியிருக்கிறார். ஏலத்தில் சென்னைக்கு வந்தபின் தமிழில் ட்விட் செய்து ஆச்சரியப்படுத்தினார். 

பத்து வருட பாசத்தை விட்டுவிட்டு சென்னைக்குத் திரும்பியது பற்றி ஹர்பஜன் சிங் கூறும்போது, ’10 வருடமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தேன். மும்பை அணியில் மீண்டும் இடம்பெறாதது பற்றி எனக்கு வருத்தம் இல்லை. ஒவ்வொரு அணிக்கும் அவர்களுக்கு என்று சில திட்டங்கள் இருக்கும். அவர்களின் அந்த நிலைப்பாட்டை, முடிவை நான் மதிக்கிறேன். இப்போது சென்னை அணிக்கு வந்திருக்கிறேன். இங்கு தோனி, பிராவோ உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் இருக்கிறார்கள். இதைவிட சிறந்த அணி வேறு கிடைக்காது. இந்த அணியின் வெற்றிக்கு உழைப்பேன். ’தோனி தலைமையில் உலகக் கோப்பையை வென்ற பின், அணியில் இருந்து நீக்கப்பட்டது பற்றியும் அப்போதும் தோனிதான் கேப்டனாக இருந்தார்’ என்றும் கேட்கிறார்கள். தோனி அமைதியானவர். அவருடன் மீண்டும் இணைவதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். இந்திய அணிக்கான நீல நிற உடையில் அவருடன் இணையவில்லை என்றாலும் சென்னை அணிக்கான மஞ்சள் உடையிலாவது அவருடன் ஆட இருக்கிறேன். சென்னை அணியில் அதிகமாக ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அதனால் ஆடும் லெவனில் இடம்பெற போட்டி இருக்கும் என்று கேட்கிறார்கள். அது ஆரோக்கியமான போட்டிதானே?’ என்றார் ஹர்பஜன் சிங். 


Advertisement

Advertisement
[X] Close