Published : 29,Jan 2018 09:56 AM

6 வருடமாக அதிமுக அரசு என்ன செய்தது: உதயநிதி கேள்வி

What-did-the-AIADMK-government-do-for-6-years---Udhayanithi-Stalin

 

பேருந்து கட்டணத்தை உயர்த்தியதற்கு திமுகதான் காரணம் எனக் கூறும் அதிமுக அரசு கடந்த 6 வருடமாக என்ன செய்தது என நடிகர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மதுரையை அடுத்த வாரிப்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேரில்‌ சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் போராட்டத்தில் பங்கேற்க முடியாததால் இவர்களை சந்திக்க வந்ததாக கூறினார். போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை நீதிமன்றமே முடிவுக்கு கொண்டு வந்ததாகவும்‌, அரசு ஏதும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார். மக்கள் மிகுந்த விரக்தியில் இருப்பதாகவும் விரைவில் இந்த ஆட்சி கலையும் எனவும் அவர் கூறினார்.

முன்னதாக பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அரசின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  பொதுமக்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் திமுக போராட்டத்தில் ஈடுபட்டது. இந்நிலையில் பேருந்து கட்டணத்தை குறைத்து அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்தக் கட்டண குறைப்பு வெறும் கண்துடைப்பு என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இன்று மாநிலம் முழுவதும் திமுக முன்னெடுத்த சாலை மறியலில் அதன் தோழமைகட்சிகள் பங்கேற்றனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்