[X] Close

பேருந்து கட்டணக் குறைப்பு அமலுக்கு வந்தது

Tamil-Nadu-bus-tickets-rate-reduced

தமிழகத்தில் உயர்த்தப்பட்டிருந்த பேருந்து கட்டணங்கள் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பெரும்பான்மை மக்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு நேற்று தெரிவித்திருந்தது.


Advertisement

பெரும்பான்மையான மக்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை தொடர வேண்டிய போக்குவரத்து கழகங்களின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டும் பேருந்து கட்டணங்களை குறைத்து உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. அதன்படி வெளியூர்களுக்கு செல்லும் சாதாரண பேருந்துகளில் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 60 பைசாவிலிருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. விரைவுப் பேருந்துகளில் கட்டணம் 80 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும், சொகுசுப் பேருந்துகளில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதிநவீன சொகுசுப் பேருந்துகளில் 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும், குளிர்ச்சாதன பேருந்துகளில் 140 பைசாவிலிருந்து 130 பைசாவாகவும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிலைகளிலும் ஒரு ரூபாய் குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள நகர்புற பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக குறைக்கப்ட்டுள்ளதாகவும், அனைத்து நிலைகளிலும் 1 ரூபாய் குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கட்டணத்தினால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என உத்தேசிக்கப்ட்டிருந்ததாகவும், தற்போது பேருந்து கட்டண குறைப்பால் நாளொன்றுக்கு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சராசரியாக 4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close