Published : 29,Jan 2018 01:47 AM

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: குடியரசுத்தலைவர் உரையாற்றுகிறார்

Parliament-Budget-Session-Starts-Today-Centre-Outlines-Targets

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர் மோடி, கூட்டத்தொடரை சுமூகமாகவும், பயனுள்ளதாகவும் நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை, கட்சித் தலைவர்கள் அரசிடம் எடுத்துக் கூறினர். 

அதேநேரத்தில், முத்தலாக் தடை சட்ட மசோதாவை இத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முனைப்புடன் இருக்கிறது. இந்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் கடும் எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சிகள் பட்ஜெட் கூட்டத்திலும் புயலைக் கிளப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மக்களவை, மாநிலங்களவை கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பின் பிப்ரவரி ஒன்றாம் தேதி பா.ஜ.க. அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்