மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் சமி வேகத்தில் தென்னாப்பிரிக்கா வீரர்கள் ஆட்டமிழக்க, இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-தென்னாப்ரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்று வந்தது. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 187 ரன்களும், தென்னாப்ரிக்கா 194 ரன்களுக்கு எடுத்தன. இதைத்தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ரகானே, விராட் கோலி, புவனேஷ்குமாரின் சிறப்பான ஆட்டத்தால் 247 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதனையடுத்து, 241 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்கா விளையாடியது. இதில், ஆம்லா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, எல்கர் தனி ஆளாக ரன்கள் எடுக்க போராடினார். மற்றவர் வந்த வேகத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எல்கர் 86 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதேபோல், இஷாத் சர்மா, பும்ரா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார். தென்னாபிரிக்கா தரப்பில் 4 பேர் டக் அவுட் ஆனார்கள். 4 பேர் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆனார்கள்.
கேப் டவுன், செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து இந்திய அணி ஏற்கனவே தொடரை இழந்துள்ளது. ஜோகன்னஸ்பெர்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. பிலந்தர் தொடர் நாயகன் விருதினையும், இந்திய அணியின் புவனேஷ்குமார் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றனர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'