Published : 27,Jan 2018 05:44 AM

வாழ்வாதாரமின்றி தவிக்கும் மூதாட்டி

Old-lady-Struggled-in-her-Life--Request-for--Government-Assistance

கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பாக்கியம் என்ற மூதாட்டி தனது கணவர் கொலை செய்யப்பட்டதால் வாழ வழியின்றி தவித்து வருகிறார்.தனக்கு அரசு உதவி புரிய வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். 67வயதிலும் வேலைக்கு சென்று தன் குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இவருக்கு இரு பிள்ளைகள்.   மாற்றுத்திறனாளிகளான இவர்களில் ஒரு மகன் இறந்து விட குடும்பத்தை தனது வருவாயில் கவனித்து வந்துள்ளர். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி வேலை பார்த்து கொண்டிருந்த கட்டிட படிக்கட்டில் இருந்து கண்ணதாசன் என்பவரால் தள்ளி விடப்பட்டு பொன்ராஜ் உயிரிழந்தார். 

இதனால் தான் மட்டுமின்றி தன் குடும்பமே வாழ்வாதாரமின்றி இருப்பதாக பொன்ராஜின் மனைவி பாக்கியம் கவலை தெரிவிக்கிறார். தனக்கு அரசு தரப்பில் இருந்து உதவி கிடைத்தால் வயதான காலத்தில் தன் வாழ்வை பார்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்று கண் கலங்கிய நிலையில் தெரிவிக்கிறார் பாக்கியம்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்