[X] Close

குரங்கை பார்த்து பதறியவருக்கு ஹார்ட் அட்டாக்

Monkey-disturbance--women-dead

திருத்தணி முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணை குரங்கு துரத்தியதில் பயந்து ஓடிய அவர் கீழே விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார்.

பெங்களூருவைச் சேர்ந்த 50 பேர் தமிழகத்திற்கு ஆன்மிக சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் திருத்தணியில் சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு வெளியே வந்து மலைக் கோயிலை சுற்றியிருக்கின்றனர். அப்போது நளினி என்ற பெண்ணின் கையில் இருந்த பையைப் பிடுங்க குரங்கு ஒன்று அவர் மீது பாய்ந்திருக்கிறது. குரங்கு பாய்ந்ததைக் கண்ட நளினி பயந்து அலறியறடித்தபடி ஓடியிருக்கிறார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த நளினிக்கு உடனடியாக மாரடைப்பு ஏற்பட்டிருகிறது. அருகிலிருந்தவர்கள் பதறிப்போய் நளினியை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தார்.

சாமி கும்பிட வந்த இடத்தில் குரங்கால் ஒருவர் உயிரிழந்த நிகழ்வால் அவருடன் வந்த மற்ற அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close