[X] Close

ஐபிஎல் ஏலம் ஒவ்வொரு வருடமும் நடக்கும், இது அப்படியா? ராகுல் டிராவிட் கேள்வி!

Focus-on-World-Cup--not-IPL-auction--Rahul-Dravid

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி, அரையிறுதியில் பங்களாதேஷை எதிர்கொண்டுள்ளது.


Advertisement

இந்த ஜூனியர் அணியில் இடம்பெற்றுள்ள, கேப்டன் பிருத்வி ஷா, சுபம் கில், ஹிமன்ஷூ ரானா, அபிஷேக் சர்மா, கம்லேஷ் நாகர்கோட்டி உட்பட சில வீரர்கள் இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஏலத்துக்கு போவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த வருட ஐபிஎல் ஏலம் நாளையும் நாளை மறுநாளும் நடக்கிறது.

இதற்கிடையே, இதுபற்றி ராகுல் டிராவிட் கூறும்போது, ’இந்த ஏலம் பற்றி வீரர்களிடம் பேசினேன். நீண்ட கால திட்டத்தை மனதில் வைத்து விளையாடச் சொன்னேன். ஏலம் ஒவ்வொரு வருடமும் நடக்கும். ஆனால், ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு ஒவ்வொரு வருடமும் அவர்களுக்குக் கிடைத்துவிடாது. இதை அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். இதனால் இளம் வீரர்கள் போட்டியில் தீவிரமாக கவனம் செலுத்துகிறார்கள். அரையிறுதி போட்டியில் பங்களாதேஷை (இன்று) சந்திக்கிறார்கள். அந்த அணியை எளிதாக நினைக்கவில்லை. பங்களாதேஷும் சிறந்த அணிதான். ஏனென்றால் ஆசிய கோப்பையில் அந்த அணியிடம் தோற்றிருக்கிறோம்’ என்றார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close