Published : 25,Jan 2018 10:36 AM

குழந்தைக்கு சூடுபோட்டு பிச்சை எடுக்க வைத்த கும்பல் சிக்கியது

Dharumapuri-Begging-mob-are-arrested-for-3-year-old-baby-Horrible

3 வயது பெண் குழந்தையை பிச்சை எடுக்க வைப்பதற்கு சூடு போட்ட 3 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மூன்று பெண்கள் இணைந்து, 3 வயது பெண் குழந்தை ஒன்றின் கையில் சூடு வைத்தனர். இதை கண்ட போலீசார் அந்தப் பெண்களை பிடித்து, குழந்தைக்கு சூடு வைத்தது குறித்து விசாரித்தனர்.

போலீஸாரின் விசாரணையில், அவர்கள் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மீட்ட போலீஸார், தருமபுரி குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் குழந்தையைக் கொடுமை செய்த, கர்நாடகாவை சேர்ந்த ரத்தினம்மாள், மஞ்சம்மாள், கங்கம்மாள் என்ற 3 பெண்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்