தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் 187 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட் ஆனது.
இந்தியா தென்னாப்ரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தென்னாப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் உள்ள நியூ வாண்டெரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய்யும், லோகேஷ் ராகுலும் 8 மற்றும் 0 ரன்களில் வெளியேற, தொடக்கத்திலேயே இந்திய அணி தடுமாற்றம் அடைந்தது. பின்னர் வந்த புஜாராவும், கேப்டன் கோலியும் நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் அவுட்டாக, அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் சரிந்த இந்திய அணி 76.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் எடுத்தது. இதற்கிடையே இந்திய பந்துவீச்சாளர் புவனேஸ்குமார் 49 ரன்களில் 30 ரன்கள் எடுத்தார். இல்லையென்றால் இந்திய அணியின் நிலைமை, மேலும் மோசமடைந்திருக்கும்.
இதைத்தொடர்ந்து தற்போது பேட்டிங்க் செய்து வரும் தென்னாப்ரிக்க அணி 3 ரன்களுக்கு 1 விக்கெட்டை பறிகொடுத்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய தோல்வி அடைந்துள்ள நிலையில், 3வது டெஸ்டில் ஆறுதல் வெற்றியை பெற போராடி வருகிறது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்