Published : 24,Jan 2018 12:16 PM

மாணவர்களிடம் கைது, தடியடி என பிடிவாதம் வேண்டாம்: கனிமொழி

DMK-MP-Kanimozhi-said-about-Student-Protest-and-Bus-Ticket-Rate

மாணவர்கள் மீது தடியடி, கைது என பிடிவாதம் பிடிக்காமல் பேருந்து கட்டணத்தை குறையுங்கள் என்று திமுக எம்.பி கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார். 

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களிடம் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கனிமொழி, இந்தி எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற பேருந்து கட்டண உயர்வையும் எதிர்த்து போராடும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

மாணவர்களை கைது செய்வது, தடியடி நடத்துவது என பிடிவாதம் பிடிக்காமல், அவர்களின் கோரிக்கை ஏற்று பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறுங்கள் என மாநில அரசையும், முதலமைச்சர் பழனிசாமியையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்