Published : 24,Jan 2018 09:54 AM

மாணவியை ஏமாற்றி 3வது திருமணம் செய்த டிரைவர் கைது!

Collage-bus-driver-Cheating-Marriage-with-collage-Student-on-3rd-time

திருச்செங்கோட்டில் 3 பெண்களை திருமணம் செய்த கல்லூரி பேருந்து டிரைவர் கைது செய்யப்பட்டார். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவியை, அதே கல்லூரியில் பேருந்து ஓட்டுநராக இருந்த சக்திவேல் காதலித்துள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே 2 திருமணங்கள் செய்தவர். இந்நிலையில் தனது 2 திருமணங்களையும் மறைத்து கல்லூரி மாணவியையும் 3வது முறையாக அவர் திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு உண்மையை அறிந்த மாணவி அதிர்ச்சியடைந்துள்ளார். 

இந்தத் தகவலை அறிந்த மாணவியின் பெற்றோர், தன் மகளை ஏமாற்றி திருமணம் செய்ததாக சக்திவேல் மீது மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், அவருக்கு உண்மையிலேயே 3 திருமணங்கள் நடந்திருப்பதை உறுதிசெய்தனர். இதை தொடர்ந்து அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்