[X] Close

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு

Oxygen-leak-in-Vellore-government-hospital

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில்  ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதால் நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். 


Advertisement

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையின் 2 வது மாடியில் உள்ள அறுவை சிகிச்சை வார்டில் ஆக்சிஜன் ‌கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த வார்டில் 12 படுக்கைகளில் இருந்த நோயாளிகள் மற்றும் உடன் இருந்தவர்கள் பயத்தின் காரணமாக அவசர அவசரமாக வெளியேறினர்.  

பின்னர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் விரைந்து ஆக்சிஜன் கசிவை சரி செய்ததையடுத்து சுமார் 30 நிமிடத்திற்கு பின்னர் நோயாளிகள் மீண்டும் வார்டுக்கு திரும்பினர். பெண்கள் வார்டில் மூதாட்டி ஒருவர் தவறுதலாக ஆக்சிஜன் செல்லும் குழாயை திறந்துவிட்டதால் விபத்து ஏற்பட்டதாக‌ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close