[X] Close

‘ஒரு பெண் குழந்தை நிச்சயம் வேண்டும்’- இந்திய பெற்றோர்கள் ஆசை

79-percentage-women-want-at-least-1-daughter--survey

இந்தியாவில் 79 சதவீத பெண்கள் குறைந்தபட்சம் ஒரு பெண் குழந்தையாவது பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர் என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.


Advertisement

பெண் குழந்தை பிறந்தால் அதனை கள்ளிப்பால் ஊற்றி கொல்லும் நிலை இந்தியாவில் இருந்து வந்தது. பெண் குழந்தையை வளர்த்து, பாதுகாத்து திருமணம் செய்து வைப்பது சிரமம் என்பதால், ஆண் குழந்தை பிறந்தால் சந்தோஷம் கொள்வதும், பெண் குழந்தை பிறந்தால் கவலை கொள்ளுவதும் என்ற நிலை இருந்தது. தற்போது இந்த நிலை பெரும்பாலும் மாறியுள்ளது. இருப்பினும், நூறு சதவீதம் மாறிவிட்டது என்று சொல்லிவிட முடியாது.

இந்நிலையில் இந்தியாவில் 79 சதவீத பெண்களும், 78 சதவீத ஆண்களும் குறைந்தபட்சம் ஒரு பெண் குழந்தையாவது பெற்றுக்கொள்ள விரும்புவதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. தேசிய குடும்ப சுகாதார அமைப்பு 15 வயது முதல் 49 வயது வரையிலான பெண்களிடத்திலும், 15 வயது முதல் 54 வயது வரையிலான ஆண்களிடத்திலும் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2005-06 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் 74 சதவீத பெண்களும், 65 சதவீத ஆண்களும் தங்களுக்கு ஒரு பெண் குழந்தையாவது வேண்டும் என கூறியிருந்த நிலையில் தற்போது பெண் குழந்தைகளை விரும்பும் பெற்றோர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது.


Advertisement

81 சதவீத முஸ்லிம் மக்களும் 79 சதவீத புத்த மத மக்களும், 79 சதவீத இந்து மக்களும் குறைந்தப்பட்சம் தங்களுக்கு ஒரு பெண் குழந்தையாவது இருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். மற்ற மதங்களை பின்பற்றும் பெண்களில் 70 சதவீத பெண்கள் மட்டுமே குறைந்தபட்சம் ஒரு பெண் குழந்தையாவது பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். எஸ்சி, எஸ்டி வகுப்பை சேர்ந்த பெண்களில் அதிகப்பட்டசமாக 81 சதவீத பெண்கள் குறைந்தபட்சம் ஒரு பெண் குழந்தையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close