[X] Close

சசி தரூர் எழுதிய “நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்” புத்தகம் வெளியீடு

shashi-tharoor-Presented-the-first-copy-of-Why-I-Am-AHindu-to-INC-India-President-Rahul-Gandhi-today

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் எழுதிய ’நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்’ (Why I Am AHindu ) என்ற புத்தகம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக உள்ள சசி தரூர், காங்கிரஸ் கட்சியில் தனித்த தலைவராக இருக்கிறார். எழுத்தாளர், பத்திரிகையாளர், மனித உரிமை வழக்கறிஞர் என பன்முகத் தன்மை கொண்டவர். ரயட் (Riot), ஷோ பிசினஸ் (Show Business), பைவ் டாலர் ஸ்மைல் மற்றும் பிற கதைகள்(The Five Dollar Smile and Other Stories), தி கிரேட் இந்தியன் நாவல் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். 

          


Advertisement

இந்நிலையில், சசி தரூர் எழுதிய ’நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்’ என்ற புத்தகம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி புத்தகத்தின் முதல் பதிப்பை சசி தரூரிடம் இருந்து பெற்றார். இந்த புத்தகத்தில் இந்து மதம் மற்றும் இந்துத்துவா இடையிலான கருத்து வேறுபாடு குறித்து சசி தரூர் அதிகம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

          

புத்தகத்தின் பின் புறத்தில் சசி தரூர் குறிப்பிட்டுள்ள, “நான் ஒரு இந்து, நான் ஒரு தேசியவாதி, ஆனால் நான் ஒரு இந்து தேசியவாதி இல்லை” என்ற கருத்து பலரால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்துத்துவா கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த புத்தகம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close