நீட் தேர்வில் சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்து கேள்விகள் கேட்கப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளதாக தமிழிசை கூறியுள்ளார்.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான இடங்களை ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மே மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஆனால் நீட் தேர்வுக்கான வினாத்தாள் குறித்த குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை.
நீட் தேர்வு வினாத்தாள் சிபிஎஸ்இ பாடத்தில் கேட்கப்படுவதால் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு இருந்து வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் இந்த விவகாரம் குறித்து அதிகம் பேசப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் அறிவித்தார். சிபிஎஸ்இ-யும் இதனை உறுதி செய்தது. ஆனால், நீட் தேர்வில் சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்து கேள்விகள் கேட்கப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளதாக தமிழிசை கூறியுள்ளார். தமிழக மாணவர்கள் தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ள சொல்லுங்கள் என தொலைபேசியில் ஜவடேகர் தம்மிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்கிறார். ஆனால் தமிழிசை தற்போது புதிய கருத்தினை தெரிவிக்கிறார். இதனால் அதிகாரப்பூர்வமான கருத்து எது என்பதில் கேள்வி எழுந்துள்ளது.
இதனால், நீட் தேர்வு நடைபெற 3 மாதங்களே உள்ள நிலையில், வினாத்தாள் எப்படி இருக்கும் என்பது குறித்து குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இறுதி வரை நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்குமா இல்லையா என்பது குறித்து குழப்பமான நிலையே இருந்தது. இதனால், தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!