Published : 22,Jan 2018 12:40 PM

தமிழக அரசை கிண்டலடித்த இமான்..!

Music-Director-Imman-alleged-tn-government

தமிழக அரசை கிண்டல் செய்து இசையமைப்பாளர் இமான் பேசியுள்ளார்.

2009ம் ஆண்டு முதல் 2014 வரை 6 ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் 2012-ம் ஆண்டில் வெளிவந்த ‘கும்கி’ படத்தின் இசையமைப்பாளர் இமானுக்கு அவ்வாண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட விருதுகள் இன்னும் யாருக்கும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் ‘இமான்100’ நிகழ்ச்சி சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் இமான் கலந்து கொண்டார். இதுவரை தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு அப்போது அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  இமான், “பணி முடிந்த பிறகும் மெட்ரோ ரயிலை இயக்காமல் ஜெயலலிதா வரட்டும் என்று நிறுத்தி வைத்திருந்தவர்கள், அறிவிக்கப்பட்ட விருதையா சீக்கிரமாக கொடுக்கப் போகிறார்கள்?" என கிண்டல் செய்து பேசினார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்