Published : 22,Jan 2018 11:46 AM

ரஜினிக்கு அரசியல் தேவையில்லை: நானா படேகர்

nana-patekar-cmmented-about-ranijikanth-policital-entry

ரஜினிக்கு அரசியல் தேவையற்றது என்று பாலிவுட் நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ரஞ்சித் இயக்கி வரும் ‘காலா’ படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நானா படேகர் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் படப்பிடிப்பில் பங்கு பெற்ற புகைப்படம் சில மாதம் முன்பு சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தது. படேகர் ஏற்கெனவே பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் இவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது. 

படேகர் வட இந்தியாவில் கிராமம் ஒன்றை தத்தெடுத்து விவசாய குடும்பங்களின் கடன்களை அடைப்பது மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது என பல நற்பணிகளையாற்றி வருகிறார். சம்பாதித்த பணம் முற்றிலுமாக உதவிக்கு சென்றபோதும் சிறிய வீட்டில் தனது தாயுடன் தங்கிக்கொண்டு மற்ற சொத்துக்களையும் விற்று விவசாயிகளுக்காக உதவி செய்வதாக பாலிவுட் பத்திரிகைகள் நானா படேகரை பாராட்டி வருகின்றன.

ரஜினியுடன் இணைந்து நடித்து வரும் அவர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்தினை பகிர்ந்து கொண்டுள்ளார். ‘‘நான் நடிக்கும் ‘காலா’படப்பிடிப்பின் போது ரஜினியிடம் அரசியல் குறித்து பேசியிருக்கிறேன். ரஜினிக்கு அரசியல் தேவையற்றது. நல்ல இதயம் கொண்டிருப்பது மட்டுமே அரசியலில் போதுமான வெற்றியை பெற்றுத்தராது. ரஜினி, எளிமையான நேர்மையான குணம் கொண்டவர். அப்படிப்பட்டவர்கள் அரசியலில் தாக்குபிடிப்பது கடினம். மக்களிடம் தந்திரமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதை ரஜினி செய்வாரா என்பது சந்தேகமே. எனவே அவருக்கு அரசியல் ஒத்துவராது என்பது எனது கருத்து’ என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்