Published : 22,Jan 2018 06:42 AM

எந்த நிதியையும் சமாளிப்போம்: உதயநிதியை விமர்சித்த ஜெயக்குமார்!

Minister-Jayakumar-said-about-Udhayanithi-Stalin

அரசியல் என்ற சமுத்திரத்தில் அனைவரும் கரை சேர முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஜெயலலிதா மரணம் தொடர்பான பொன்னையன் கருத்து, விசாரணை ஆணையத்தில் கூறப்படவேண்டியது. குற்ற உணர்வு உள்ளவர்கள் திமுகவினர். திமுக ஆட்சியின் மீது தான் இந்தியாவிலேயே முதன் முதலில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. லஞ்சம், ஊழல் என்ற சொற்கள் பிறந்தது திமுக ஆட்சியில் தான். எனவே அவர்கள் கண்களுக்கு தான் கமிஷன் என்பது தெரியும். அதிமுக ஆட்சியில் அனைத்து ஒப்பந்தங்களும் வெளிப்படையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முறைகேடு நடந்திருப்பதற்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றங்களுக்கு செல்லட்டும், அதைவிடுத்து அரசியல் ரீதியான மலிவான விளம்பரத்தை தேடுவதற்கு குற்றச்சாட்டுகளை திமுகவினர் முன்வைக்கின்றனர்” என்று கூறினார்.

அப்போது உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது ஒரு சமுத்திரம். இதில் எல்லோராலும் கரை சேர முடியாது. ஆனால் அதிமுக என்ற கப்பல் கரை சேர்ந்துவிட்டது. எனவே எந்த நிதியாக இருந்தாலும் நாங்கள் சமாளிப்போம். அந்த திராணி எங்களுக்கு உண்டு” என்று கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்