ஆண்டாள் குறித்து கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதியுள்ள கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்து அமைப்புகள் பலவும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஆனால் தான் தவறான எண்ணத்தில் ஆண்டாள் குறித்து கூறவில்லை, தன்னுடைய கருத்து யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக வைரமுத்து கூறியிருந்தார். இருப்பினும், வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. இதனால் ஆண்டாள் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்து நேற்று வீடியோ பதிவு ஒன்றினை வைரமுத்து வெளியிட்டார். ஆனாலும், பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்து வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் இல்லையென்றால் போராட்டம் தொடரும் என சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்த விஜயகாந்த், அங்கு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்டாள் குறித்து கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்தார். அத்துடன் சடகோப ராமானுஜ ஜீயர் நடத்தும் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். அரசியலை பொறுத்தவரை ரஜினியும், கமலும் ஜூனியர்கள் என்றும், தான் சீனியர் என்றும் கூறிய விஜயகாந்த், உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று தெரிவித்தார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!