[X] Close

இந்தியில் 'விக்ரம் வேதா'  எப்போது?: மாதவன் அறிவிப்பு 

Madhavan-confirms--Vikram-Vedha--Hindi-remake-

இந்தியில் 'விக்ரம் வேதா' எப்போது ரீமேக் செய்யப்படும் என்று மாதவன் விளக்கம் தெரிவித்திருக்கிறார்.


Advertisement

கடந்த வருடம் தமிழில் வெளியான ‘விக்ரம் வேதா’ ப்ளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து அப்படம் இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதன் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பெரும் போட்டியும் நிலவி வந்தது. அனைத்து மொழிகளிலும் தாங்களே தயாரிக்கவுள்ளதாக ‘ஒய் நாட்’சஷிகாந்த் தெரிவித்திருக்கிறார். 

இந்நிலையில் அமேசான் வெப் சீரியஸில் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ரீத்' ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அவரிடம் ‘விக்ரம் வேதா’இந்தி ரீமேக் குறித்து கேட்டனர். அதற்கு "இந்தாண்டு கண்டிப்பாக ‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் தொடங்கும். எனது கதாபாத்திரத்தில் நானே நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்குப் பெரிய வியாபார மார்க்கெட் உள்ள நடிகர்கள் தேதிக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close