[X] Close

ரூ.100 கோடி செல்லாத பணம்: பாதுகாக்க முடியாமல் தவிக்கும் போலீசார்!

Kanpur-Police-has-no-place-to-keep-seized-Rs-100-crore

தொழிலதிபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 100 கோடி ரூபாயை எங்கு பத்திரமாக வைப்பது என்று கான்பூர் போலீசார் தவித்து வருகின்றனர். 


Advertisement

மத்திய அரசு 2016-ம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததை அடுத்து, அந்த நோட்டுகள் வங்கிகள் மூலம் மக்களிடம் இருந்து திரும்பப் பெறப்பட்டது. கடந்த ஆண்டு அப்படி திரும்ப பெறுவதற்கான காலக்கெடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து மதிப்பிழந்த அந்த நோட்டுகளை வைத்திருந்தால் குற்றமாகக் கருதப்படும் என்று மத்திய அரசு எச்சரித்து இருந்தது. 


Advertisement

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பில்டர் ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது பற்றி போலீசாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அந்த வீடு, தொழிலதிபர் ஆனந்த் கத்ரி என்பவருக்கு சொந்தனமானது என்று தெரியவந்தது. அவரது பூர்வீக வீட்டில், மதிப்பிழந்த 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் குவியல் குவியலாக இருந்தன. அதை கைப்பற்றிய போலீசார், பின்னர் அதை எண்ணினர். சுமார் 100 கோடி ரூபாய் இருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஆனந்த் கத்ரி மற்றும் ஐதராபாத், கொல்கத்தா, வாரணாசி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்துவருகிறது. 

இந்நிலையில் பணத்தை கைபற்றிய கான்பூர் போலீசாருக்கு இன்னொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்தப் பணத்தை எங்கு வைத்து பாதுகாப்பது என்பதுதான் அந்தச் சிக்கல். ‘கைப்பற்றப்பட்ட மதிப்பிழந்த பணத்தை எங்கு பத்திரமாக வைப்பது என்பது பற்றி யோசித்துவருகிறோம். விரைவில் முடிவு தெரியும்’ என்று தெரிவித்துள்ளார் கான்பூர் எஸ்.எஸ்.பி. அகிலேஷ் குமார்.  


 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close