[X] Close

புனேவில் ஐடி ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை?

Pune-Techie--Wife-And-4Year-Old-Child-Found-Dead-At-Home

புனேவில் ஐடி ஊழியர் ஒருவர் தனது மனைவி, குழந்தையுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் ஜெயேஷ் படேல். ஐடி ஊழியரான இவர் தனது மனைவி குழந்தையுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் இவரது வீடு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  காவலர்கள் வந்து பார்த்த போது ஜெயேஷ் படேல் அவரது மனைவி இருவரும் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்தனர். வீட்டு தரையில் அவரது 4வயது மகனும் இறந்து கிடந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், இச்சம்பவம் குறித்து ஜெயேஷ் படேலின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்து வருவதாக தெரிவித்தனர். கணவன், மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய படி சடலமாக இருந்தனர். எனவே இது தற்கொலையாக இருக்கலாம் தெரிகிறது. ஆனால் குழந்தையின் இறப்பு குறித்து எதுவும் தெரியவில்லை. குழந்தையின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை.பிரேத பரிசோதனைக்குப் பின்னர் முழுமையான தகவல் தெரியவரும் என்றனர். மேலும் சிறுவன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் இதனால் ஜெயேஷ் படேல் மனவருத்ததுடன் காணப்பட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close