[X] Close

ஆஷஸ் தோல்விக்கு பழிவாங்கும் இங்கிலாந்து

England-s-batsmenchase-down-their-target

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Advertisement

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை  4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. தற்போது ஒரு நாள் போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இன்று நடைப்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட், ரஷித் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது.மிட்செல் ஸ்ட்ராக் வீசிய முதல் ஓவரிலே அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் நிதானமாக விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். இங்கிலாந்து அணி 37வது ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. 38வது ஓவரை வீசிய மிச்செல் ஸ்ட்ராக் இந்த ஓவரில் அடுத்தடுத்து  2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நேரத்தில் ஆஸியின் பிடி இறுகுவது போல் தெரிந்தது.ஆனால் பின்னர் களமிறங்கிய வோக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்து அணி 44வது ஓவரிலே வெற்றி இலக்கை அடைந்தது. 5போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close